நாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின்பிறப்பாக்கிகளின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த மின் தடை நிலவுவதாக இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.

குறிப்பாக நாட்டின் அம்பாறை, குருணாகல், நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் குறித்த மின்தடை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 2 ஆவது மின்பிறப்பாக்கி மையம் செயலிழந்துள்ளதாகவும் அதனை சரிசெய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் இதனால் தொடர்ந்தும் நாட்டின் சில பகுதிகளில் மின்தடை நீடிக்குமென மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.