வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தால் திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை ஸ்தம்பித்துள்ளது.

திருகோணமலையில், இன்று (19.03.2019) தமிழ் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. ஒருசில மாணவர்கள் மாத்திரமே சென்னிறருந்த போதும் அவர்கள் பெற்றோர்களால் மீள அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஆசிரியர்கள் விடுமுறையை அறிவித்து சென்றுள்ளனர். அரச அலுவலகங்களில் அதிகமான உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவுள்ளது. 

பொதுப்போக்குவரத்துக்களின் சேவை குறைவாக காணப்பட்டதுடன் வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.