(செய்தி பிரிவு)

நாட்டுக்கு எதிரான மனித உரிமை பேரவையில் கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கவுள்ள  நாடுகளின் தூதுவர்களிடம் ஜனாதிபதி முக்கிய கலந்துரையாடலினை மேற்கொள்ள வேண்டும். இணையனுசரணை வழங்கும் விடயத்தில் இருந்து முழுமையாக விலகிக்கொள்வதே சிறந்த தீர்வாக காணப்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 அரசியலமைப்பு திருத்தத்தை மறுசீரமைப்பு செய்தலை கண்காணித்தல், இராணுவம், பொலிஸ் பிரிவினருக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தல்,  அதிகார பகிர்வு தொடர்பிலான   விடயங்களை நிறுவுதல்,  பாதுகாப்பு துறையின் சட்டத்திட்டங்களை நீக்குதல், திருத்தல், இராணுவத்தினருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தல், சர்வதேச நீதிபதிகளின் தலையீட்டினை ஏற்படுத்தல் உள்ளிட்ட  பல்வேறு  விடயங்கள் இணைனுசரனை வழங்குவதாக குறிப்பிடப்பட்ட பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலே இராணுவத்தினர் மற்றும் முக்கிய பொலிஸ் தரப்பினர் குறிப்பிடப்பட்ட நாடுகளுக்கு செல்வதற்கு  அந்நாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டன. இப்பிரேரணையில் குறிப்பிட்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற நாம் முற்படும் போது நாட்டின் சுய இறைமையிணை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

 நாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தீர்மானங்களில் இருந்து விடுப்பட வேண்டியது  அவசியமாக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் தாங்கள் நேரடி கவனம் செலுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் இம்முறை இடம் பெறும் மனித உரிமை பேரவையில்  இணையனுசரனை வழங்குவதாக குறிப்பட்ட பிரேரணையில் இருந்து விலகிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.  எமது நாட்டுக்கு  எதிராக பிரேரணைகளை முன்வைக்க தீர்மானித்துள்ள நாடுகளின் உயர்ஸ்தானிகஸ்தர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அவசியமாகும்.

இக்கடிதத்தில்  எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ,  மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன,  இலங்கை கம்யூனிச கட்சியின் தலைவர் ராஜா கொள்ளுரே,   சமசமாஜ கட்சியின் தலைவர்   திஸ்ஸ விதாரண,  தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ,  இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் அசங்க தவரத்ன,  தேச விமுக்தி ஜனதா பெரமுனவின் தலைவர் டி. கலங்சூரிய,   இடதுசாரி கட்சியின் தலைவர்   வாசுதேச  நாணயக்கார,  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி;எல்.பீறிஸ் ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டனர்.