(ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்)   

இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே  ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்தின் ஜெனிவாவில் தெரவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 40 அவது கூட்டத்தொடரானது ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் உரையாற்றியமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.