(நா.தினுஷா) 

2020 ஆம் ஆண்டாகும் போது ஏற்றுமதி பொருளாதாரத்தினூடான வருமான வீதமானது இரண்டு மடங்காக அதிகரிககும் என்று ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். 

அத்துடன் அரச தொழில்வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் போது நாட்டின் செலுவுகளும் அதிகரிக்கவே செய்கின்றன. எனவே உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து ஏற்றுமதி பொருளாதாரத்தை அதிகரிப்பதனூடாகவே நாட்டை இந்த நிலையிலிருந்து மீள் கட்டியெழுப்ப முடியும். 

அவ்வாறு இல்லாவிட்டால் மீண்டும் கடனைபெற்றுக்கொள்ள வேண்டிய தேவையே ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.