நாட்டின் சில பாகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பதுளை மாவட்டம், காலி மாவட்டம், மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.