நாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த மின் தடை நாட்டின் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலுள்ள  2 ஆவது மின்பிறப்பாக்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.