தெல்தோட்டைக்கு குடிநீர் வழங்குவதிலுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில், 12 மில்லியன் யூரோ செலவில் கலஹா - தெல்தோட்டை நீர் வழங்கல் திட்டத்தை இந்த வருடத்துக்குள் ஆரம்பிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிமின் 37 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வெளி நோயாளர் பிரிவு கட்டடத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சென்று பார்வையிட்டு உரையாற்றும்போதே இதனை குறிப்பிட்டார்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசிம், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான எம். நயீமுல்லாஹ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர் கே.எம். யாஸீன் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.