(ஆர்.விதுஷா)

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில், அதன் முகாமையாளரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று ஞாயிற்று கிழமை கல்கிஸ்ஸ பகுதியில் 7.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது. ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி இயங்குவதாக கல்கிஸ்ஸ ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றுன்றுக்கு அமையவே, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 44 வயதுடைய சீதுவை பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. அத்துடன், சந்தேக நபரை கல்கிஸ்ஸ நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்கிஸ்ஸ பொலிசார் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.