(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

தனியார் துறையினருக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உப்பினரும் முன்னாள் தொழில் அமைச்சருமான காமினி லொக்குகே இன்று பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமை்சரவை அந்தஸ்தற்ற மற்றும் தொலைத்தொடர்ப்புகள், வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதே அவர் இந்த பிரேரணையை முன்வைத்தார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொண்டுள்ளதாக மார்தட்டும் அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் தனியார் துறைக்கு எந்த சலுகையையும் வழங்கவில்லை. 

அத்துடன் தொழில் அமைச்சு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சாக இருப்பதால் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.