தனியார் பேருந்து ஊழியர்களுடனான பிரச்சினை காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை பஸ் ஊழியர்கள் இன்று காலை தொடக்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியா இ.போ.ச.வினருக்கும் தனியாருக்கும் இடையே இணைந்த நேர அட்டவணை மற்றும் இணைந்த சேவை தொடர்பாக பிரச்சினைகள் நிலவி வந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனினும் நீதிமன்றத்தின் கட்டளையை புறக்கணித்து அதனை எதிர்க்கும் முகமாக தனியாரும் ஒரு சில பொலிஸாரும் ஈடுபட்டமையினாலேயே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாக பஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அரச ஊழியர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.