பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் பாராளுமன்ற வளாகத்தில் அண்மையில்  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட  அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் கடந்த 13 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அனைத்து  பல்கலைக்கழக  ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைத்து  பல்கலைக்கழக  ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டாரா தெகிதெனியவை இன்று 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்திருந்த  நிலையில் இன்று  அவர் பிணையில் விடுவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.