உயர் தரம் வாய்ந்த நுளம்பு வலைகள் உற்பத்தி விநியோக நடவடிக்கைகளுக்கு புகழ்பெற்ற Rainco (Pvt) Ltd முன்னெடுத்திருந்த ‘RaincoThegiDela’ ஊக்குவிப்புத் திட்டம் அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது. இந்த திட்டத்தில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த அன்பளிப்புகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

கொழும்பு Ozo ஹோட்டலில் இடம்பெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில், Rainco முகாமைத்துவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த புத்தாக்கமான ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்றிருந்த வாடிக்கையாளர்களில் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களை குலுக்கல் முறையில் தெரிவு செய்திருந்தது அன்பளிப்புகளை வழங்கியிருந்தது.

முதல் ஐந்து அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு 200,000 ரூபாய் பெறுமதியான படுக்கை அறைத் தெரிவுகள் வழங்கப்பட்டிருந்தன. இரண்டாம் நிலைக்கு தெரிவாகியிருந்த எட்டு அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு சிங்கப்பூருக்கு சென்று வருவதற்கு இரு விமானச் சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. மேலும் மூன்றாம் பரிசாக 60 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் பணப் பரிசு வழங்கப்பட்டிருந்தது.

2018 டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 2019 பெப்ரவரி 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் Rainco நுளம்பு வலைகளை கொள்வனவு செய்திருந்த சகல வாடிக்கையாளர்களுக்கும் சுரண்டும் கூப்பன் அட்டை வழங்கப்பட்டிருந்ததுடன், இந்த பரிசுப் போட்டியில் பங்கேற்பதற்கான தகைமையை பெற்றுக் கொண்டனர்.

மொபைல் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஊக்குவிப்புத் திட்டத்துக்கு 35,000 க்கும் அதிகமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. இந்த போட்டியில் நுகர்வோர் பங்கேற்பது மிகவும் இலகுபடுத்தப்பட்டிருந்தது. Rainco நுளம்பு வலை ஒன்றை கொள்வனவு செய்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், 0720 111 444 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு missed call ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதன் போது அவர்களுக்கு 4 இலக்கங்களைக் கொண்ட ஊக்குவிப்பு குறியீடு ஒன்று அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 0720 111 000 எனும் தொலைபேசி இலக்கத்துடன் அழைப்பை ஏற்படுத்தி தமது சுரண்டும் அட்டையில் காணப்பட்ட இரகசிய குறியீட்டு இந்த திட்டத்துக்கு தம்மை பதிவு செய்து போட்டியில் பங்கேற்பதற்கான தகைமையை பெற்றுக் கொண்டனர்.

ரூ. 50 – 100 வரையான உடனடி ரீலோட்களை தம்மை பதிவு செய்து கொண்ட சகல வாடிக்கையாளர்களுக்கும் Rainco வழங்கியிருந்ததனூடனாக, சகல Rainco நுளம்பு வலை வாடிக்கையாளர்களையும் வெற்றியாளர்களாக்கியிருந்தது.இந்த ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பாக Rainco (Pvt) Ltd பிரதம செயற்பாட்டு அதிகாரி அஹமட் அரூஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த திட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததன் நோக்கம், இலங்கையர்களை தம்மை நுளம்புக் கடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நுளம்பு வலைகளை பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பதாக அமைந்திருந்ததுடன், அதை சிறந்த தீர்வாக அவர்களுக்கு உணர்த்துவதாகவும் அமைந்திருந்தது.” என்றார்.

இலங்கையில் காணப்படும் முன்னணி நுளம்பு வலை வர்த்தக நாமம் எனும் வகையில், Rainco நுளம்பு வலைகள் உலகத் தரம் வாய்ந்தனவாக அமைந்துள்ளதுடன், கடுமையான தரக்கட்டுப்பாடுகளின் பிரகாரம் புத்தாக்கமான வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.பிரத்தியேகமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நுளம்பு வலைத் தெரிவுகளில் Golden, Pearl, Freedom மற்றும் Comfort போன்றன அடங்கியுள்ளன. வெவ்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. smart tuck, smart loop மற்றும் smart Fix போன்ற மேலதிக புத்தாக்கமான உள்ளம்சங்களும் இதில் காணப்படுகின்றன.

அரூஸ் தொடர்ந்து தெரிவிக்கையில், “எமது தயாரிப்புகளினூடாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை வளமூட்டுவது எமது நிறுவனத்தின் நோக்கமாகவும் இலக்காகவும் அமைந்துள்ளது. எமது தயாரிப்பினூடாக மட்டுமன்றி, நாம் வழங்கும் அனுபவத்தினூடாக பெருமளவு பெறுமதியை எம்மால் சேர்க்க முடிந்துள்ளது என நாம் கருதுகிறோம். இந்த ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக பெருமளவான எமது கிராமிய மற்றும் நகர்புற நுகர்வோரை ஈடுபடுத்தியிருந்ததுடன், அவர்களுக்கு பெறுமதியான அன்பளிப்புகளையும் வழங்கியிருந்தது.” என்றார்.

Rainco தனது வடிவமைப்புச் சிறப்புக்காக 2017 ஆம் ஆண்டின் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் புத்தாக்கமான வர்த்தக நாமம்” எனும் விருதை சுவீகரித்திருந்தது. அத்துடன் பெருமைக்குரிய ISO-9001:2015 சான்றையும் தனது தரம் வாய்ந்த நுளம்பு வலைகளுக்காக பெற்றுக் கொண்டுள்ளது.