தற்போது மாத்தறையில் இருந்து கண்டிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் ரயில் சேவை எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு முதல் பெலியத்தையில் இருந்து சேவையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த ரெயில் சேவை அடுத்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. 

பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான சேவைக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரெயில் எஞ்சின் ஒன்று இணைத்துக் கொள்ளப்பட உள்ளது.