(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித  உரிமை பேரவையில் முகாமிட்டுள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகள்   மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 

நாளை அல்லது நாளைமறுதினம்  இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

இதன்போது   இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவை தொடர்ந்து கண்காணிப்புடனும் அவதானத்துடனும்  செயற்படவேண்டுமென  புலம்பெயர் பிரதிநிதிகளும்   இலங்கையிலிருந்து சென்றுள்ள  தமிழ் பிரதிநிதிகளும் கோரிக்கைவிடுக்கவுள்ளனர்.