(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரின் இலங்கை தொடர்பான  விவாதத்தில் பங்கேற்கும் நோக்கில்  இலங்கை அரசாங்கத்தின் விசேட தூதுக்குழுவினர்  நாளை  திங்கட்கிழமை ஜெனிவா வருகின்றனர். 

 

இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்ட அரசாங்கத் தூதுக்குழுவினர் நாளை  ஜெனிவா வருகின்றனர்.     

தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் வெளிவிவகார செயலாளர் ரவிநாத  ஆரியசிங்க ஆகியோர் நாளை ஜெனிவா வருகின்றனர். 

20 ஆம்திகதி நடைபெறவுள்ள  இலங்கை தொடர்பான விவாதத்தில் அரசாங்கத் தூதுக்குழுவினர்  சார்பில்  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றவிருக்கின்றார்.  

அத்துடன் குறித்த தூதுக்குழுவினர் ஐ.நா. மனித  உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளனர்.