(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில்  எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை தொடர்பான விவாதம்  நடைபெறவுள்ளது.  

இதில்  இலங்கை விவகாரத்தில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தயாராகி வருகின்றனர். 

இந் நிலையில் 20 ஆம் திகதி  இலங்கை தொடர்பான  அறிக்கையை   ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் உத்தியோகப்பூர்வமாக வெளியிடவிருக்கின்றார். அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்ட  பின்னர் அதுதொடர்பான விவாதம்  நடைபெறவுள்ளது. 

இலங்கையின் சார்பிலும் அரசாங்கத்தின்  தூதுக்குழுவினர் இந்த   விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளதுடன்,  பிரிட்டன்,  ஜேர்மன், கனடா உள்ளிட்ட நாடுகளின்  பிரதிநிதிகளும்  இந்த விவாதத்தில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.