(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத யுத்தத்தை வெற்றிக் கொண்ட எமக்கு தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஒரு சவால் அல்ல என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எலிய அமைப்பு ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு இன்று பதுளையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

முறையற்ற பொருளாதார முகாமைத்துவ கொள்கைகள் இன்று அனைத்து துறைகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய கொள்கைகள் அடிப்படி மாற்றமடையுமாயின் அது அரசாங்கத்தின்  பலவீனத்தன்மையினை வெளிப்படுத்தும். பொருளாதாரம் முன்னேற்றமடைய  வேண்டுமாயின் தேசிய கொள்கை உறுதியானதாக பேணப்பட வேண்டும் என்றார்.