நாட்டில் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் போது கட்சி,  நிறம். சாதி மற்றும் மத பேதங்கள் களைந்து நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமெனவும், அரசியல் வேறுப்பாடுகளுக்கு மத்தியிலும் இவ் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதே உண்மையான அபிவிருத்தி என, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை தெற்கு அபிவிருத்தி அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 

பல்வேறுப்பட்ட திசைகளில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் இந்நாட்டிற்கு நன்மை பயக்கின்றது. இது நாட்டின் பொருளாதாரத்தை வலிமையாக்குவதுடன்,  மக்களின் வாழ்கை தரத்தையும் மேம்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

தெனியாய நகரில் நடைப்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.