(நா.தினுஷா) 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் குருணாகல் - திருகோணமலை பிரதான வீதியையும் நிர்மானிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

மாவனெல்லை - ஹெம்மாதகம , கம்பொல பிரதான வீதிகளின் திறப்புவிழா இன்று பிரமதர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஆட்சி மாற்றத்தின் பின்னர் பெருந்தெருக்களின் நிர்மாண பணிகள் மிக விரைவாக இடம்பெற்று வருகின்றன. அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டும் வருகின்றது. தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள வீதிகள் மாத்திரமல்லாமல் இன்னும் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வீதிகள் நிர்மாணிக்க வேண்டிய தேவையும் உள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.