'' வடக்கின் கல்வி நிலை வீழ்ச்சி : உரியவர்களின் அக்கறையின்மையே காரணம் ''

Published By: Priyatharshan

15 Apr, 2016 | 02:11 PM
image

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், தேசிய தரப்படுத்தல் ரீதியில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது வேதனை தருவதாக உள்ளதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், 

கடந்த காலங்களில் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்த நாம் அயராது பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். யுத்தம் நிலவிய காலங்களில் தரைப்பாதை போக்குவரத்துகள் முடக்கப்பட்டிருந்த நிலையில்கூட கடல் மார்க்கமாக கல்வித் துறை சார்ந்த பல்வேறு உபகரணங்களை கொண்டு சென்றும். பல்வேறு ஏற்பாடுகளை முன்னெடுத்தும் வடக்கின் கல்வி நிலையை எம்மால் இயன்றளவில் காபாற்றியும் மேம்படுத்தியும் வந்துள்ளோம்.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கின் கல்வி நிலையானது பாரிய சவாலுக்கு உட்பட்டிருந்தது. அதனையும் நாம் முறியடித்து, முற்றாக அழிந்தும் பாதிப்படைந்தும் காணப்பட்ட பல பாடசாலைக் கட்டிடங்களை மீளமைத்தும் புனரமைப்புச் செய்தும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும் அனைத்து உபகரணங்களையும் வழங்கியும் விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வுக் கூடங்கள், கணனி கூடங்கள் போன்றவை அமைத்தும், ஆசிரிய வளங்களைப் போதுமானவரை பகிர்ந்தும் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்தியிருந்தோம்.

ஆனால், துரதிஸ்டவசமாக இன்று வடக்கின் கல்வி நிலை மிகவும் வீழ்ச்சி கண்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் எனத் தம்மை இனங்காட்டிக்கொண்டு, இந்த அரசில் இணக்க அரசியல் ரீதியாகப் பங்கெடுத்து வருகின்ற தமிழ்த் தலைமைகளின் அக்கறையின்மையே இதற்குக் காரணமாகும். அதே நேரம், முன்னர் கல்விப் பணிப்பாளராக இருந்த ஒருவர் தற்போதைய வடக்கு மாகாண சபையில் கல்விக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார். அப்படி இருந்தும் வடக்கின் கல்விநிலை இவ்வாறு வீழ்ச்சி கண்டு வருகிறதென்றால் இவர்களின் அக்கறையின்மை திறமையின்மை, செயலாற்றலின்மை போன்றவையே இதற்குக் காரணமாகும். 

அதே நேரம், இத்தகைய ஒருவர் கல்விப் பணிப்பாளராக இருந்த நிலையில் அவரது செயற்பாடுகள் எப்படி இருந்திருக்கும்? என்ற கேள்வியும் இப்போது எமது மக்களிடையே எழுந்துள்ளது.

அதே நேரம், கிழக்கு மாகாணம் மேற்படி தேசிய தரப்படுத்தலில்  8 ஆவது இடத்தை - கடைசிக்கு முந்திய இடத்தைப் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருப்பவரும் ஏற்கனவே கல்வித்துறை சார்ந்த உயர் பதவி வகித்தவர் எனக் கூறப்படுகின்றது. அதே போன்று வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கல்வி அமைச்சுகளுக்கு பொறுப்பாக உள்ள இருவரும் ஒரே கூட்டணிக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்.

தமிழ் மக்களின் மீட்பர்கள் எனக் கூறிக்கொண்டு இருக்கும் இவர்கள் இவ்வாறு எமது கல்வி நிலையை நாட்டின் இறுதியான இரண்டு நிலைகளுக்கு தள்ளிவிட்டிருப்பது வேதனைதரும் விடயமாகுமென அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59