மன்னார்- தலை மன்னார் பிரதான வீதி, புதுக்குடியிறுப்பு பகுதியில் இன்று பிற்பகல் இடம் பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளதோடு, அவரது மனைவி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் சாந்திபுரம் கிராமத்தை வதிவிடமாகவும் கொண்ட தனியார் பஸ்ஸின் உரிமையாளரான வி.விமலதாசன் (வயது-49) என்பவர் ஆவார்.

மேற்படி நபர் மன்னாரில் இருந்து தலை மன்னார் நோக்கி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில்   பயணித்த போது , தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி பொருட்களுடன் பயணித்த லொறியொன்று குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியமையினாலே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததோடு, அவரது மனைவி படுகாயமடைந்து, சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டதோடு, மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.