(நா.தினுஷா) 

மென்பான பொருட்களை போன்று பொதியிலடைக்கப்பட்ட இனிப்பு பொருட்களுக்கும் நிற குறியீட்டினை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பிரதானமாக பொதியில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களில் உள்ள சீனி, உப்பு மற்றும் கொழுப்பு போன்றவற்றின் அளவினைக் குறிப்பிட்டு காட்டுவதற்கு இந்த நிறங்கள் கையாளப்படவுள்ளதுடன் இதற்கென சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி முதல் இந்த நிற குறியீட்டு முறைக்கான உத்தியோக பூர்வ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.