கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக்கள் கட்டட தொகுதி மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று பி.ப 3 மணிக்கு ஆரம்பமானது.

முன்னதாக தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டனர். 

தொடர்ந்து வடமாகாண விளையாட்டுத்தொகுதிகள் கட்டடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தர்சினி திறந்து வைத்தார். தொடர்ந்து குறித்த கட்டடத்தொகுதியில் உள்ள நீர்ச்சல் தடாகத்தை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர். 

இந்த நிகழ்வில் தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராள மன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,  விளையாட்டு அமைச்சு உத்தியோகத்தர்கள் ,விளையாட்டு வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டனர்.