(இராஜதுரை ஹஷான்)

இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டுக்காக ஒருமித்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்திலே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம் பெற்றது. ஆனால் எதிர்ப்பார்த்த நோக்கங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு வெறும்  வியாங்கொட பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு  முன்னேற்றமடைய வேண்டுமாயின் புதிய மாற்றங்களை அரசியலில் ஏற்ப்படுத்த வேண்டும். தேசிய அரசாங்கம் முடிவுறுவதற்கு பல  காரணிகள் இரண்டு தரப்பிலும் காணப்படலாம்.  ஆனால்  ஆட்சி மாற்றத்தினை ஏற்ப்படுத்திய மக்கள் ஏமாற்றமடைய கூடாது.  தவறுகளை திருத்திக் கொண்டு இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றினைந்து செயற்படுவது பல பிரச்சினைகளுக்கு  இலகுவான தீர்வினை பெற்றுக் கொடுக்கும் என்றார்.