(நெவில் அன்தனி)

சப்ரகமுவ மாகாணத்தில் பிரபல கால்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான மாவனல்லை செரெண்டிப் கழகம், ப்றீமியர் லீக் முதலாம் பிரிவில் சம்பியனாகும் குறி்க்கோளுடன் பொலிஸ் கழகத்தை, கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

பல்லாண்டுகளுக்கு முன்னர் பலம்பொருந்திய அணியாகத் திகழ்ந்த மானல்லை செரெண்டிப் கழகம், மேடு, பள்ளங்களை சந்தித்து சில வருடங்களாக மூன்றாம் பிரிவிலும் பின்னர் இரண்டாம் பிரிவிலும் விளையாடி கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக முதலாம் பிரிவில் விளையாடி வருகின்றது.

இந்த வருடம் லீக் சுற்றில் ஒரு போட்டியில்தானும் தோல்வி அடையாமல் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய செரெண்டிப் கழகம், அந்த சுற்றில் பொலிஸ் கழகத்திடம் மாத்திரம் தோல்வி அடைந்தபோதிலும் அரை இறுதியில் இ.போ.ச.   கழகத்தை வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றதன் மூலம் சப்ரகமுவ மாகாணத்திலிருந்து சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றும் முதலாவது அணி என்ற பெருமையையும் செரெண்டிப் கழகம் பெற்றுக்கொண்டது. பொலிஸ் கழகமும் ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட தகதிபெற்றுள்ளது.

அரை இறதியில் பொலிஸ் கழகத்திடம் அடைந்த தோல்வியை இறுதிப் போட்டியில் நிவர்த்தி செய்து வெற்றிவாகை சூடி சம்பியனாகவேண்டும் என்ற குறிக்கோளுடன் மாவனல்லை செரெண்டிப் கழகம் இன்றைய இறுதிப் போட்டியை எதிர்கொள்கின்றது. ஆனால், பொலிஸ் கழகம் இப் போட்டியை இலகுவில் நழுவவிடும் என எதிர்பார்க்கமுடியாது.

அணிகள்

செரெண்டிப் கழகம்: ரியாஸ் மொஹமத் (அணித் தலைவர்), மொஹமத் ஆஷிர், மொஹமத் ராஜ்ஷெரொன், அபுததுல் பஷித், நிஷான் லக்ஷித்த, மொஹமத் நஜான், அமீர் அலி, மொஹமத் பஸ்மில், மொஹமத் அப்லால்,ஈ மொஹமத் மிபீத், மொஹமத் பசில், அன்டன் ரஞ்சன், ஆர். ஜெகதீஷ், அமான் சாஜித், மொஹமத் அஸ்ர், ஹேமன்த பண்டாரகொட, லன்கா மதுசன்க, மதுசன்க திசேரா, அசன் இவான்ஸ், மொஹமத் ரசான், யுகதேஸ்வர்ன் அமல்ராஜ். கிம்ஷான அத்தநாயக்க, அப்துல் அஸீஸ், முஷ்பிக் மொஹமத்.

பொலிஸ் கழகம்: சாமிக்க குமார (அணித் தலைவர்), லன்காஷ்வர, துஷார சம்பத், சுஜித் சஞ்சீவ, துமுதில் ஷஷிக்க, எஸ். மொஹமத் ரபிக், இரட்டைச் சகோதரர்களான சம்பத் பத்திரண மற்றும் நிலத்த பத்திரண, நுவன்த சாரக்க, எம். ஹெட்டிஆராச்சி, எஸ். சுமார, ஏ. நிக்கலஸ், எஸ். ஜயசிங்க, கே. கந்தேபொல, எம். ஹெட்டிமுதலிகே, எம். சத்துரங்க, ஆஷான் சிறிவர்தன, சத்துர குணரட்ன, ரியாஸ் அஹ்மத், எஸ். தயாபரன், எஸ். சக்கீப், ஏ.ஜே. பிகராடோ, டி. பெர்னாண்டோ, ஏ. ஆப்றூ, தனுஷ் பெரேரா, மஹேந்திரன் தினேஷ் (கோல் காப்பாளர்), ஆ. மொஹமத், எஸ். ரசூனியா, எம். சுபைக்.