நோர்வூட் பிரதேச சபையின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ நகரபகுதியில் உள்ள அனைத்து வரத்த நிலையங்களிலும் சுகாதார பரிசோதகர்களினால் பாரிய சுற்றிவளைப்பொன்று இன்று )17.03.2019) ஞாயிற்றுகிழமை காலை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது,  உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் வெதுப்பகங்கள் போன்ற விற்பனை நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களினால் சோதனையிடப்பட்டது.

இதன் போது பயறு, அரிசி , கடலை வகைகள் போன்ற அடிப்படை உணவு பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பாவனைக்கு உதவவாக ஒரு சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.இதேவேளை, பொகவந்தலாவ நகரில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது சுகாதார பரிசோதகர்கள், 35 கிலோவுக்கும் மேற்பட்ட பாவனைக்கு உதவாத பச்சை பட்டானிகள் மீட்கப்பட்டபோது அதில் புளுக்கல் காணபட்டதாகவும், தெரிவித்த சுகாதார பரிசோதகர்கள் பாவனைக்கு உதவாக பொருட்கள் வைத்திருந்த வர்த்தக நிலைய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பாவனைக்கு உதவாத பொருட்கள் தீயிட்டு, அழிக்கபட்டதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.