(இராஜதுரை ஹஷான்)

தனியார் பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன,  நாடுதழுவிய ரீதியில் தனியார் பாடசாலைகள்  ஆரம்பிப்பது இலவச கல்விக்கு நேரடியாக தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில்  எதிர்தரப்பினர் ஜனாதிபதியை  விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது பாராளுமன்றத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் வாதங்கள் இடம்பெறுவது கிடையாது. அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்தையும் ஒரு அமைச்சரின் தனப்பட்ட விடயங்களிலும் கவனம் செலுத்துகின்றார்களே தவிர மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைப்பது கிடையாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.