வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பணிப்புரை விடுக்கவும், ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவுமென அமைச்சரவையால் தீர்மானமெடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகராக நஸீர் அஹமட்டுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஜனாதிபதியின் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ள நஸீர் அஹமட் குறித்த நியமனத்திற்கான தனது பணியை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.