சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அங்குள்ள மிகப் பெரிய முதலீட்டு நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வழிவகைகள் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.

முன்னதாக சவுதி அரேபியா சென்ற கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் றியாத்தில் சவுதி மன்னர் 'முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத்துடைய சிரேஷ்ட ஆலோசகரும் சவுதி அரேபிய பத்வா குழுவின் அதிஉயர் பீட உறுப்பினரும், கடந்த ஹஜ்ஜின்  அரபா தினத்தில் அரபா உரை நிகழ்த்திய கலாநிதி 'அஷ்ஷெய்க் ஷஹாத் அல் ஷத்ரி' அவரது இல்லத்தில்  மதியபோசன விருந்தளித்து வரவேற்றார்.

அதனை தொடர்ந்து இருவருக்குமான  கலந்துரையாடல் இடம்பெற்றது. 

மிக விரைவில் கிழக்கு ஆளுநர் வேண்டுகோளுக்கமைய இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவதற்கான தனது சம்மதத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு சவுதி அரசின் உதவிகளைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்தோடு கிழக்கு ஆளுநருக்கு விஷேட விருது ஒன்றையும் வழங்கிவைத்தார்.

சவுதி அரேபிய இளவரசர் 'சவுத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவுத்துக்கு சொந்தமான 'Exelentia Arabia' நிறுவனத்தின் பிரதித்தலைவர் 'Giovanni Zappia' யவுக்கும்  ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு இடம் பெற்றது.

இந் சந்திப்பில் சவுதி அரேபியாவிலும், அதற்கு வெளியிலும் பல கோடி டொலர்களை முதலீடு செய்கின்ற மிகப் பெரிய நிறுவனமான  '' Exelentia Arabia இலங்கையிலும் முதலீடு செய்வது தொடர்பாகவும், இலங்கையில் உள்ள தொழிற்சாலைகளில் முதலீடு செய்து பொருளாதார ரீதியில் இலங்கையை முன்னேற்றுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சவுதி அரேபியாவில் பல பில்லியன் டொலர்கள் முதலீடு செய்து அமைக்கப்டும் புதிய நகரத்திற்கு பொறுப்பான இந்நிறுவனம் இலங்கையிலும் பாரிய முதலீடுகளை விரைவில் மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளது.

இச் சந்திப்பில் முஸ்லிம் வேல்ர்ட் லீக் கிழக்காசிய ஆலோசகர் கலாநிதி அஹமத் ஹமாத் ஜிலான் மற்றும் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மஷூர் மொளலானாவும் கலந்துகொண்டார்கள்.