(இராஜதுரை ஹஷான்)

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் இன்று மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் உயிரிழந்திருப்பார்கள் என  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தளை முவன்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர்  கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாரிய போராட்டத்தின் மத்தியிலே 30 வருட கால யுத்தம் வெற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் யுத்தத்தை  வெற்றிக் கொண்ட இராணுவத்தினர் இன்று தண்டிக்கப்பட்டுகின்றனர். எமது நாட்டு இராணுவத்தினர் 09 பேருக்கு  வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஒரு சில நாடுகள் குறிப்பிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி இராணுவத்தினரை  நாட்டுக்குள் அனுமதிப்பதும் இல்லை. இவையனைத்தும் ஒருதலை பட்சமான செயற்பாடாகும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.