ஐநா.வின் சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வின் விசேட அதிதியாக கலந்துகொள்வதற்கு கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கென்ய வாழ் இலங்கை மக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு நைரோபி நகரில் இடம்பெற்றது.

கென்யாவின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் இலங்கையர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இலங்கையைச் சேர்ந்த மாணவ, மாணவிகளால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றது.

ஜனாதிபதி அவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் முகமாக கென்யா வாழ் இலங்கையர் சங்கத்தினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுனில் டி சில்வா உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.