லொரியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்திற்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிதுநேரத்தி சிகிச்சை பயனின்றி
உயிரழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

மொனராகலைப் பகுதியின் ரன்வெலிகம – சமாதிபுர பிரதான பாதையில் இன்று முற்பகல் 9 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மொனராகலையைச் சேர்ந்த திமுத்து லக்மால் என்ற 27 வயது நிரம்பிய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மொனராகலைப் பொலிசார் விபத்திற்குள்ளான லொரிச் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

விபத்தில் மரணமான இளைஞனின் சடலம் சட்டவைத்திய பரிசோதனைக்காக மொனராகலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.