வரலாற்று சிறப்பு பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் இன்று திருவிழா  இடம்பெற்றது.

இம்முறையும் இலங்கையிலிருந்தும்  இந்தியாவிலிருந்தும்  ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை காலை யாழ். ஆயர் வண. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருப்பலியுடன் திருவிழா  சிறப்புத் திருப்பலி பூஜைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இடம்பெறுவதுடன் திருப்பலி பூஜைகளின் பின்னர் திருச்சொரூப ஆசிர்வாதமும் இடம்பெற்றது