2018ஆம் ஆண்டு அறிக்கைக்கு அமைய காசநோயினால் பீடிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 8258 என கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார ஆய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இவர்களுள் 5827 பேர் சுவாசப்பையுடன் தொடர்புப்பட்ட காசநோயாளர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. 

கண்டறியப்பட்ட நோயாளர்களின் 40 சதவீதமானோர் மேல்மாகாணத்தை சேர்ந்தவர்கள் இதேபோன்று காசநோயாளர்களுள் 25 சதவீதமானோர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 

தொற்று நோயான காசநோய் பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். நோயினால் பாதிக்கப்பட்டோர் விரைவாக சிகிச்சைக்கு உட்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவாலை வெற்றிக்கொள்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என சுகாதார ஆய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.