ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் அதிசக்திவாய்ந்த சுமார் 200 கிலோ கிராமுக்கு அதிக வெடிப்பொருட்களை லொறியில் எடுத்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சூரியவெவ விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சூரியவெவ அந்தரவெவ பகுதியில் வைத்து குறித்த வெடிபொருட்கள் நேற்று  கைப்பற்றப்பட்டுள்ளன. 

வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட லொறியை சோதனையிடுவதற்காக நிறுத்தக்கோரி போதும், அதனை பொருட்படுத்தாது லொறியை வேகமாக ஓட்டிச் சென்றுள்ள போதும் விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்று லொறை கைப்பற்றியுள்ளனர். 

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களுடன் சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் மேற்கொண்டு வருகின்றனர்.