மாத்தளை - லக்கல பொலிஸ்நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை சில ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் மூன்று பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகளில், இரண்டு பொலிஸ் ஊழியர்கள் மற்றும் பொலிஸ் உதவி அதிகாரி ஒருவருமே இவ்வாறு  பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திலிருந்த T56 ரக துப்பாக்கி மற்றும் 5 கைத்துப்பாக்கிகள் கொள்ளையிட்டுச் சென்றன சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் லக்கல பொலிஸ் நிலையத்தில் 4 அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.