சந்தையில் உள்ள எண்ணெயின் தரம் குறித்து பிரச்சினைக்குரிய நிலைமை நிலவுவதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1600 வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் மஹேந்ர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தரமற்ற எண்ணெயை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மஹேந்ர பாலசூரிய தெரிவித்துள்ளார்.