சிவனொளிபாதமலைக்கு சென்ற ஒருவர் இன்று (16 ஆம் திகதி) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிரிபெர்ணாந்து  தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அலபலாவல என்ற இடத்தை சேர்ந்த 45 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரரான முத்துபண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் தனது குடும்பத்தாருடன் சிவனொளிபாதமலைக்கு சென்றுக்கொண்டிருந்த   போது ஊசிமலை பகுதியில் வைத்து திடீரென  மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நல்லதண்ணி பொலிஸாரினால் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையின் சவசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இன்று பிரத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக மஸ்கெலியா வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய  தெரிவித்தார்.