முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை விசேட மேல் நீதிமன்றத்தினால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26 தொடக்கம் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை வெளிநாட்டிற்குப் பயணஞ்செய்வதற்கு கோத்தபாய ராஜபக்ஷ அனுமதியைக் கோரியிருந்தார். இந் நிலையிலேயே அவர் மீதான வெளிநாட்டு தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.