(நா.தினுஷா) 

சீனா எக்ஸிம் வங்கியின் நிதியுதவியுடன் குருணாகலை - ஹபரண வரையில் பொருட்கள் மற்றம் பயணிகளை ஏற்றி செல்வதற்கான விசேட புகையிர பாதையை நிர்மானிப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக போக்குவாரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இதற்கென 2018 ஆண்டின் தேசிய வருமானத்தில் 80 மில்லியன் ருபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த புகையிரத வீதியினை அமைப்பதற்கான மொத்த செலவு 947 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஆரம்பக்கட நடவடிக்கையாக 84 கிலோமீட்டர் தூரமுடைய குருணாகலை - ஹபரண புகையிரத பாதையின் நிர்மானபணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.