(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரச பாடப்புத்தங்களில் எனது புகைப்படத்தை அச்சிட  29 மில்லியன் ரூபாய்கள் மேலதிகமாக செலவானதென ஜே.வி.பி முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அவ்வாறு கல்வி அமைச்சரின் செய்தியை  அச்சிட  மேலதிகமாக ஒரு ரூபாவேனும் செலவாகியதாக நிரூபிக்கப்பட்டால் எனது அமைச்சுப் பதவியை துறப்பேன் எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக, இந்த ஆண்டுக்காக அச்சிடப்பட்ட அரச பாடப்புத்தங்களில் கல்வி அமைச்சரின் புகைப்படம் பதிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. இதற்காக மேலதிகமாக 29 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறான மோசமான கல்வி நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என சபையில் குற்றம் சுமத்தினார்.

இதற்கு பதலளித்து போசும்போதே கல்வியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.