(நா.தனுஜா)

அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு வருகை தரவுள்ளது. 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதுடன், அவுஸ்திரேலிய கடற்படை, விமானப்படை மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் பலரும் வருகைதரவுள்ளனர்.

எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கை வரவுள்ள மேற்படி கடற்படைக் கப்பல்கள் 29 ஆம் திகதி வரை நாட்டில் தரித்து நிற்கும். 

அதைத் தொடர்ந்து சுமார் இரண்டரை மாதகாலத்திற்கு இந்திய – பசுபிக் பிராந்தியத்திலுள்ள இன்னும் பல நாடுகளுக்கு செல்லவுள்ளன.