(ஆர்.விதுஷா)

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

சேவை அவசியம் கருதியே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பிலியந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  கல்கிஸ்ஸ தலைமை பொலிஸ் பரிசோதகராகவும், கப்புறுபிட்டிய  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிலியந்தலை பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரியாகவும்  இடம்மாற்றப்பட்டுள்ளனர்.  

இதேவேளை, கினிகத்தென பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  கம்புறுப்பிட்டியவுக்கும் இடம்மாற்றப்பட்டுள்ளதுடன், காலி  பொலிஸ்  பரிசோதகர் டி.ஜே.எஸ். கருணதாச நிர்வாக  பொறுப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.