(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவரும் தொண்டர் ஆசிரியர் நியமனங்களை விரைவில் வழங்க கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் கல்வி அமைச்சு மற்றும் நரக திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

எமது அரசாங்கத்தால் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகமாக இடம்பெற்று வருகின்றன. கிழக்கு மாகாணத்திலும் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்திருக்கின்றன. இதனையிட்டு கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். என்றாலும் இன்னும் சில குறைபாடுகள் இருந்து வருகின்றன. அவற்றையும் நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.