(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

அரச கல்வித்துறையை தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டங்கள் வெகுவாக இடம்பெற்று வருகின்றது. அதனை அரசாங்கம் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பணம் அறவிடும் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம்  இடமளிக்கக்கூடாது. அதேபோல்  பாடசாலைகள் இனரீதியாக அல்லாது சகலருக்கும் பொதுவானதாகவும் செயற்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றின் மீதான நீதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.