இந்திய பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியாகியுள்ளது

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இதனை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் தென்சென்னை வடசென்னை  மத்திய சென்னை தஞ்சாவூர் தூத்துக்குடி உட்பட முக்கிய 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகின்றது.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி  கன்னியாகுமரி புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றது

ம.தி.மு..க ஈரோட்டிலும்  விடுதலைச்சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மற்றும் சிதம்பரத்திலும் போட்டியிடுகின்றது