(இராஜதுரை   ஹஷான்)

தவறென்று தெரிந்தும்  தமது அரசியல் சுய தேவைகளுக்காக  மக்களை பலியாக்கும் திட்டங்களுக்கு  இன்று ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் உடந்தையாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

வரவு - செலவு திட்டத்தின் மீதான இரண்டாம்  வெற்றிப் பெற்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியான தீர்மானங்களை சுயமாக தீர்மானிக்கும் உரிமை ஐக்கிய தேசிய கட்சியினருக்கு கிடையாது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின்  விருப்பத்திற்கு இணங்கவே அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.