(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

மலையக பாடசாலைகளுக்கான ஆசிரியர் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் வெகு விரையில் 2500 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

அத்துடன் மலையகத்திற்கென்ற பல்கலைக்கழகம் ஒன்றினை அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று கல்வி அமைச்சு மற்றும் நகர திட்டமிடல், நீர்வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.