மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பணியில் ஈடுப்பட்டு இருந்த 4 பொலிஸாரை வைத்திய பரிசோதணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 

மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் இன்று அதிகாலை 1.00 மணியளவில் திருடப்பட்ட சம்பவம் இடம்பெறும் வேளையில் பணியில் இருந்த நால்வரும் மது பயன்படுத்தி இருந்தனரா என்று கண்டுபிடிக்கவே பரிசோதணை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், துப்பாக்கிகளை திருடிச்சென்றவர் அணிந்திருந்த ஆடைகளின் நிறமும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் , இந்நிலையிலேயே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ள பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.